search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் சட்டசபை பட்ஜெட்"

    அசாம் மாநிலத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏழை மணப்பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான 11.6 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #AssamBudget
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில நிதி மந்திரி ஹம்மந்தா பிஸ்வா சர்மா சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பா.ஜனதா அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தது.

    ஏழை மணப்பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான 11.6 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குடும்பத்தில் முதல் 2 பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

    ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு இந்த சலுகை கிடைக்கும்.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோ 3 ரூபாய் விலையில் 57 லட்சம் குடும்பங்களுக்கு மத்திய அரசு அரிசி வினியோகம் செய்து வருகிறது. இந்த விலை 1 ரூபாயாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் இலவச கல்வி பெற வேண்டுமானால் அவர்களது பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 3-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அவர்களுக்கு பாடப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

    ரூ.700 கோடி செலவில் மாணவ-மாணவிகளுக்கான இலவச சீருடை, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேற்படி படிப்புக்காக வாங்கப்பட்ட கல்வி கடன்களில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    இது தவிர மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. #AssamBudget
    ×